உலகத்தமிழ்
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
தமிழறிஞர்களும், மொழியியலாளர்களும், தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
சங்க காலம் (கிமு 400 – கிபி 300)
சங்கம் மருவிய காலம் (கிபி 300 – கிபி 700)
பக்தி இலக்கிய காலம் (கிபி 700 – கிபி 1200)
மையக் காலம் (கிபி 1200 – கிபி 1800)
தற்காலம் (கிபி 1800 – இன்று வரை)
நெ. து. சுந்தரவடிவேலு
பிறப்பு நெ. து. சுந்தரவடிவேலு
அக்டோபர் 12, 1912
நெய்யாடுபாக்கம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு ஏப்ரல் 12, 1993 (அகவை 80)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில் கல்வியாளர், தமிழ்ப் பேச்சாளர், எழுத்தாளர், இலக்கிய ஆசிரியர்
நாடு இந்தியா
இனம் தமிழர்
நாட்டுரிமை இந்தியர்
எழுதிய காலம் 1912-1993
குறிப்பிடத்தக்க
விருது(கள்) பத்மஸ்ரீ தேசிய விருது
1961 சிறந்த கல்வியாளர்
துணைவர்(கள்) காந்தம்மா
பிள்ளைகள் கா.சு.திருவள்ளுவன் (பிறப்பு 1949 டிசம்பர் - இறப்பு 1959 செப்டம்பர்)
பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார்.
1951 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.