Sri Sani Bhagavan Suprabhatham

VT LABS

Sri Sani Bhagavan Suprabhatham

Música e áudio
  • 0.00
(0 votos)

Instalação gratuita

100

Instalações de aplicativos

Android 4.1+

Versão mínima

Com anúncios

Propaganda

01.01.1970

Data de lançamento

Mudanças recentes:

Sri Sani Bhagavan Suprabhatham

Descrição:

சூரிய பகவானுக்கும் சாயா தேவிக்கும் புத்திரனாக (மகனாக) வந்து தோன்றிய (பிறந்த) சனிஸ்வர பகவானே எழுந்தருளும்

சூரியனுக்கு முன்னாலுள்ள மேற்கு திசையில் பிள்ளைப் போன்ற வடிவில் ஆசனத்தில் அமர்ந்திருப்போனே சனிஸ்வர பகவானே எழுந்தருளும்.

திருநள்ளாறை சிற்றமாகக் (இடம்) கொண்டு பக்தருக்கு திருவருள் புரிபவனே சனிஸ்வர பகவானே எழுந்தருளும்

யமனைத் தேவக் கிரகமாக் கொண்டு தன்யைக் கிரகமூத்தியாகக் கொண்டவனே சனிஸ்வர பகவானே எழுந்தருளும்

மகர மற்றும் கும்ப ராசியின் அதிபதி ஆனவனே நீ எழுந்தருளும்.

இரும்பினால் ஆன தேரில் எட்டுக் குதிரைகளைப் பூட்டிப் பவனி வந்து நீ எழுந்தருளும்.

சுக்கிரனையும் புதனையும் நண்பனாகக் கொண்டவனே நீ எழுந்தருளும்.

நீலா என்கிற மனைவியை இடப்பாகம் கொண்டவனே நீ எழுந்தருளும்.

குளித்தனைப் பதல்வனாகப் பெற்றதினால் குளிகை நேரத்தில் அசுபத்தை நீக்கிச் சுபக் காரியங்கள் மட்டுமே செய்திட உவந்த நேரமாக்கியவனே எழுந்தருளும்.

காலச் சக்கரத்தைப் பிளந்து செல்லும் ஆற்றலைப் படைத்தவனே எழுந்தருளும்.

மனித ஜாதகத்தில் ஆயுட்காரகனாக விளங்கிடுபவனே எழுந்தருளும்.

கருநீல மேனியனே கரிய நிறப்பிரியனே எழுந்தருளும்

வில்லும் அம்பும் வாழும் வரதமுத்திரையும் கரங்களில் கொண்டு காக வாகனத்தில் பவனி வருபவனே எழுந்தருளும்.

எதற்கும் அஞ்சாத வீரனே ஏழரைச் சனியில் அகப்பட்டோரை ஆட்டிப் படைக்கும் சூரனே எழுந்தருளும்.

தோத்திரப் பிரியனே துதிப்போர்க்குத் துணையிருந்து காப்பவனே எழுந்தருளும்.

நல்லெண்ணையில் எள் தீபமேற்றி நாள்தோறும் துதிப்போர்க்கு நன்மைகள் புரிபவனே எழுந்தருளும்.

அங்கஹீனம் முற்றவருக்குப் புதிய ஆடை, அன்னம், காலனி, உடையாவும் தானம் தந்திட பிரியபடுபவனே எழுந்தருளும்.

பிரதி சனிக்கிழமை விரதமிருந்து கருங்குவளை மலர்களால் அர்ச்சித்துக் காத்து எள் கலந்த அந்தப் இட்டு வர சர்வ நலம் உண்டாகும் ஈஸ்வரனையும் சனீஸ்வரனையும் இணைந்து வழிப்படும் புண்ணிய நாளான சனிப் பிரதோஷத்தில் வணங்கி வழிபட கார்ய சித்தியாகும்

இரும்புச் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் முகம் பார்த்து அதை உத்தமருக்குத் தானம் செய்து திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வழிபட்டால் பிணிகள் தீர்ந்து சர்வகார்ய சித்தியாகும்.

சரணம் சரணம் சனீஸ்வர சரணம்

சரணம் சரணம் காக வாகனனே சரணம்

சரணம் சரணம் சனீஸ்வர மூர்த்தியே சரணம்

சரணம் சரணம் மிம் பத மலரடி சரணம்

சரணம் சரணம் சனீஸ்வர பகவானே சரணம்

சரணம் சரணம் காக வாகனனே சரணம்

சரணம் சரணம் சனீஸ்வர மூர்த்தியே சரணம்

சரணம் சரணம் மிம் பத மலரடி சரணம்.

VT LABS Outros aplicativos

Baixar