Bhagavath Geethai Tamil Bhagavad Gita
பகவத் கீதை:
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும்.
வாழ்வின் நடுவில் நிற்கும், வாழ வேண்டிய, வாழ்க்கையோடு போராட வேண்டிய ஒரு பொறுப்புள்ள மனிதனுக்குச் சொல்லப் பட்டது.
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திரு வாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்று ஒரு வாசகம் உண்டு.
மற்ற புராண இதிகாசங்களைப் போல் இல்லாமல் இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை.
உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் தமிழிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மனித வாழ்வை வளமானதாகவும் தீதின்றி புலன்களை அடக்கி வாழ வேண்டி இச் சிறப்பு மிக்க பகவத் கீதை தமிழ் இலவச செயலி வழங்கியுள்ளோம். பதிவறக்கம் செய்து பயன்பெறுங்கள்.