Lakshmi Kuberar 108 Potri for

VT LABS

Lakshmi Kuberar 108 Potri for

موسیقی و صدا
  • 0.00
(0 رای)

نصب رایگان

500

نصب ها

Android 4.1+

نسخه حداقل

با تبلیغات

تبلیغات

01.01.1970

تاریخ انتشار

تغییرات اخیر:

Lakshmi Kuberar 108 Potri for Subiksham

توضیحات:

ஸ்ரீ‌லஷ்மி குபேர பூஜை

தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்ரீ‌லஷ்மி குபேர பூஜை செய்வது வழக்கம். இந்தப் பூஜை செய்வது மூலம் வணங்கும் பக்தர்களின் ஏழ்மை குறைந்து வாழ்வில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெறுவர்.

இப்பாடலின் அர்த்தம் என்னவென்றால்

வட திசைக்கு உரியவனே (வட திசையில் வீற்றிருப்பவனே) போற்றி
ஓம் ஸ்ரீ‌லஷ்மி குபேர போற்றி
பக்தர்களின் மனதை வசிக்கரிக்கும் திரு உருவே போற்றி
என்றும் உம் பாதத்தையே வணங்குகிறோம் போற்றி
எங்கள் வாழ்க்கையில் உள்ள வறுமையினை ஒழிப்பவனே போற்றி
எங்களுக்கு வேண்டிய வளத்தைக் தருகிறவனே போற்றி
பற்றாத நிதியுடையவனே போற்றி
வரதனுக்கே கடன் தந்தவனே போற்றி
பத்தர்களுக்கு வரங்கள் பல தருபவனே போற்றி
வண்ணமயமானவனே போற்றி
சிவந்த திருமேனியானே (உடல்) போற்றி
சிரித்த திரு முகத்தவனே போற்றி
சிவனாரின் பக்தனே உன்னை போற்றி
எல்லோரிடமும் செல்வாக்கு மிகுந்தவனே (அதிகமுள்ளவனே) போற்றி
ஸ்ரீ‌லஷ்மியின் அருள் பெற்றாய்ப் போற்றி
எங்களுக்கு நல்ல வாழ்க்கை தந்திடுவாய் போற்றி
எங்களை ஏற்றமுற செய்திடுவாய் போற்றி
எழிலான அழகுடையாய்ப் போற்றி
எந்நாளும் உன்னைப் பணிய வந்தோம் போற்றி
எல்லோரிடமும் சாந்த குணமுடையவனே போற்றி
தாமரையில் இருப்பவனே போற்றி
மீனாசனம் அமர்ந்தாய்ப் போற்றி
எங்களுக்கு மேன்மை பல தருபவனே போற்றி
எங்கள் அழாகபுரி அரசனே போற்றி
உம் அடியார் குறை தீர்ப்பவனே போற்றி
தேவையான நேரத்தில் அபயக்கரம் அருள்பவனே போற்றி
ஆண்டமெய் ஞானமருள் போற்றி
அன்பாலே என்னை ஆள்பவனே போற்றி
நல்ல சமயத்தில் அடியேனுக்கு உதவிடுவாய்ப் போற்றி
என் சங்கடங்களைத் தடுப்பவனே போற்றி
சொர்ண கீரிடம் தரித்தவனே (அணிந்திருப்பவனே) போற்றி
முத்துக் குடை கீழ் அமர்ந்தவனே போற்றி
குபேர பட்டிணத்தின் அதிபதியே போற்றி
என் குறைகளைத் தீர்க்க வல்லானே போற்றி
எனக்குக் கல்வியோடு நிதியருள்வாய் போற்றி
நம் கரம் குவித்தோம் மெய் தொழுதோம் போற்றி
கனக மயம் ஆனவனோ போற்றி
இரத்தின மங்கள தெய்வமே போற்றி
இரத்தின கல் அணிந்தவனே போற்றி
அம்மாவாசையில் அருள்வாய் போற்றி
இவ்வுலகின் ஆஸ்திகளின் அதிபதியே போற்றி
ஒவ்வொரு மாதமும் பௌர்னமியில் பலன் தருவாய் போற்றி
எனக்குப் பக்க துணையாய் வந்திடுவாய் போற்றி
எங்கள் உழவனுவுக்கு உதவிடுவாய் போற்றி
என் ஊழ்வினையை அழிப்பவனே போற்றி
இந்த உலக மக்கள் காப்பவனே போற்றி
எங்களைச் செழிப்பாக வாழ வைப்பாய் போற்றி
எம் மக்களின் மனம் கவர்ந்தாய்ப் போற்றி
திறப்புடனே வாழ வைப்பாய் போற்றி
சிந்தையிலே நிறைந்தவனே போற்றி
மலையனவே நிதியளிப்பாய்ப் போற்றி
தரை பரிவாய் தனவனே போற்றி
நாங்கள் தாழ் பணிந்தோம் தயை புரிந்தாய் போற்றி
விஷ்னவனின் மைந்தனே போற்றி
யக்க்ஷகன ரூபனே போற்றி
செல்வாக்கு அளிப்பவனே போற்றி
குள்ளமான வடியுடையாய் போற்றி
பத்ராவை மணந்தவனே போற்றி
இலங்கை ஆண்டவனே போற்றி
குன்றாத அருளுடையாய் போற்றி
மாதுளையைக் கையில் வைத்தாய் போற்றி
சொர்ண கலசம் உடையவனே போற்றி
பொன் மூட்டை தரித்தவனே போற்றி
எம் மதத்தவருக்கும் ஏற்றவனே போற்றி
வியாழன் அன்று வழிபடுவோம் போற்றி
பூரத்தில் பூஜிப்போம் போற்றி
பூப் போன்ற மனமுடையாய் போற்றி
தனம் தான்யம் தருபவனே போற்றி
உன் கையில் கதை உடையவனே போற்றி
குதிரை மீது அமர்ந்தவனே போற்றி
குலம் செழிக்க வைப்பவனே போற்றி
நவநிதியின் அதிபதியே போற்றி
யஜுர்வேதம் போற்றியவா போற்றி
கிளி மீது வலம் வருவாய் போற்றி
கீர்த்திகளை வழங்கிடுவாய் போற்றி
வைஷ்ரவன தெய்வனே போற்றி
ஏக அக்க்ஷ பின்கலனே போற்றி
விலகாது உடனிருப்பாய் போற்றி
வெற்றிக்குத் துணை புரிவாய் போற்றி
கின்னரர்கள் அதிபதியே போற்றி
ஷைத்ர ரத மலர் அணிவார் போற்றி
உலகோரை உயர்த்திடுவாய் போற்றி
மையூரஜன் பெயருடையாய் போற்றி
மனுஷமிரிதி புகழும் உன்னைப் போற்றி
பச்சை வண்ண பிரியனே போற்றி
புராணங்கள் புகழும் உன்னைப் போற்றி
எள் விதைகள் உனக்கு அளித்தோம் போற்றி
தர்ம பாலன் பெயருடையாய் போற்றி
குபேர கோலம் போடுவோம் போற்றி
மகாலக்ஷ்மி அருளுடையாய் போற்றி
இராவணனின் தமையனே போற்றி
கத்தவர்களே ஆள்பவனே போற்றி
நல்ல குபேரன் தந்தையே போற்றி
மணிகிரிவனை பெற்றவனே போற்றி
மூன்று கால்கள் உடையவனே போற்றி
கீரியைக் கையில் பிடித்தவனே போற்றி
வாஸ்து செய்ய உதவிடுவாய் போற்றி
குபேர மூலைக்கு அதிபதியே போற்றி
அதிஷ்டத்தின் அதிபதியே போற்றி
அதிஷ்டத்தைத் தந்திடுவாய் போற்றி
புஷ்பகவி மானம் கொண்டாய் போற்றி
தன்தேராஸ் நாயகனே போற்றி
பண்டாரி கோவில் அமர்ந்தாய் போற்றி
குஷயர்கள் நாயகனே போற்றி
வண்ணக் கோல பிரியனே போற்றி
சித்திரா பௌர்ணமி பிறந்தாய் போற்றி
ஜெயினர்கள் பணிபவரே போற்றி
தொழில் ஓங்க செய்பவரே போற்றி
பௌத்திரர்கள் தொழுபவரே போற்றி
அன்பர் மனம் அமர்ந்தவரே போற்றி

VT LABS برنامه های دیگر

دانلود