* Added Saibaba Aarti Songs
சீரடி சாய்பாபா (செப்டம்பர் 28, 1838 – அக்டோபர் 15, 1918), மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்த ஓர் குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (சூஃபி குரு அல்லது ஆன்மீக வழிகாட்டி) அல்லது குதுப் (பரிபூரண மனிதர்) ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
பல்வேறு மகிமைகள் பொருந்திய பாபாவின் சத் சரிதத்தை பாராயணம் செய்து செல்வத்தை விரும்புபவன் செல்வத்தையும், நல்ல வியாபாரிகள் வியாபாரத்தில் வெற்றியையும் அடைவர். உண்மைக்கும், பக்திக்கும் தகுந்தவாறே பலன்களும் அமையும். இவைகளின்றி எவ்விதமான அனுபவமும் இல்லை. இச்சரிதத்தை பக்தியுடன் படித்தால் சாயி மனம் மகிழ்ந்து உங்கள் அறியாமையையும், ஏழ்மையையும் நீக்கி உங்களுக்கு ஞானமும், செல்வமும், க்ஷேமமும் நல்குவார். கருத்தூன்றிய மனத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தால் அது எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும். தனது நலனை எவன் மனதில் கொண்டுள்ளானோ அவன் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும்.
கடவுளின் திருவடிகளைக் காணச்செய்து அவர்களின் சம்சார பயங்களைப் போக்கும் சாயிபாபாவின் ஸத் சரிதம் பாராயணம் இப்பொழுது ஆப் வடிவில் இணைய வசதியின்றி படிக்கலாம்.
✔ புத்தகம் போன்ற வடிவில் எளிதாக படிக்க
✔ ஆடியோ வடிவில் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கலாம்
✔ பாபாவின் பல்வேறு புகைப்படங்கள்
✔ சாயிபாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி
✔ சாயிபாபாவின் ஆரத்தி
✔ தினமும் பாராயணம் செய்யும் நினைவூட்டல் (நோட்டிபிகேஷன்)
We would like to thank for your interest to with our app. Please share your thoughts and comments with us.