*Updated
தமிழர் வாழ்வின் அனைத்துப் பருவத்திலும் எல்லா நிகழ்விலும் இசை ஒரு முக்கிய கூறாக இடம்பெறுகிறது. எழுச்சிப்பெற்று விளங்கும், தமிழிசையில் சிலப்பதிகாரப் பாடல்களைச் சிலம்பு இசை எனும் பொருண்மையில் அலைபேசிச் செயலியாக உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கம். சிலப்பதிகாரத்தின் கதையோட்டத்திற்கு மையக்கருவாக விளங்கும் பன்னிரண்டு பாடல்கள் மட்டும் தமிழரின் அடிநாதமாக விளங்கிய பண்கள் மற்றும் இசைக்கருவிகள் கொண்டு தமிழிசையின் பெருமையை எடுத்தியம்பும் வகையில் இச்செயலி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தொடர்பியல் துறை ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.