Shirdi Saibaba
பத்ரி என்ற ஊரில் பிராமணக் குடும்பத்தில் (1838 ஆம் ஆண்டு) பிறந்தார் சத்குரு சாய்நாதர். பின்பு சில காலம் இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து வந்தார். தன் 16 வயதில் ஷீர்டி கிராமத்தில் மீண்டும் வேறு ஒரு பிராமண குடும்பத்தில் தஞ்சம் அடைந்தார்.
வெங்கூசாவினால் சீடனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர் யோகாவில் ஆழ்ந்தவராகக் கிராக மக்களுக்குக் காட்சி அளித்தார் ஸ்ரீ சாயிநாதர்.
முப்பிறவியில் ராமனின் பக்தனாக வாழ்ந்த கபீர்தாஸரே மறு அவதாரமாக ஸ்ரீ சாமிநாதர் கருதப்படுகிறார்.
இளைஞனாக இருந்த போது ஷீர்டிக்கு வந்து ஒரு பெரும் ஆன்மீக சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்துள்ளார்.
இப்பாடல் அவரைப் போற்றி எழுதப்பட்டுள்ளது.
வரவேண்டும் நீயே சாயி பாபா
வரம் வேண்டினோமே சாயி பாபா
தரவேண்டும் நீயே சாயி பாபா
கரம் குவித்தோமே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
குறையேதுமில்லா சாயி நாதா
குழலூதும் கண்ணா சாயி நாதா
பரந்தாமன் நீயே சாயி நாதா
பணிந்தோமே உன்னைச் சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
அறியாமை போக்கும் சாயி பாபா
அடியாரைக் காக்கும் சாயி பாபா
புரியாத புதிரே சாயி பாபா
புலனாகும் அறிவே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
எளியோனாய் வந்த சாயி நாதா
இருள் போக்கும் சுடரே சாயி நாதா
தெளிவான நதியே சாயி நாதா
தினம் போற்றினோமே சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
பிணியாவும் தீர்க்கும் சாயி பாபா
பிழையாவும் நீக்கும் சாயி பாபா
கனிவோடு பார்க்கும் சாயி பாபா
கருணாகரனே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
பரப்பிரம்மம் நீயே சாயி நாதா
பரம் பொருளானாய் சாயி நாதா
அருளாளன் நீயே சாயி நாதா
அடையாத கதவே சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
மழை மேகம் நீயே சாயி பாபா
மலர்த் தோட்டம் நீயே சாயி பாபா
அழைத்தோமே உன்னை சாயி பாபா
அணையாத விளக்கே சாயி பாபா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
நிழலாகத் தொடரும் சாயி நாதா
நிலையான நிதியே சாயி நாதா
வழங்காயோ அருளே சாயி நாதா
வணங்காதோர் உண்டோ சாயி நாதா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே ராம ராமா சாயி ராமா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா
ஹரே கிருஷ்ண கிருஷ்ணா சாயி கிருஷ்ணா