Mahalakshmi 108 Potri
இந்து சமயத்தில் மஹாலக்ஷ்மியை ஒரு முக்கிய பெண் கடவுளாக வணங்கி வருகின்றனர். செல்வத்தை அள்ளித் தரும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகப் போற்றுகிறார்கள். பல அவதாரங்கள் எடுத்துள்ளார் என்று கருதப்படுகிறது.
இது ஒரு நவராத்திரி சிறப்புப் பாடல். இப்பாடலில் மகாலக்ஷ்மியைப் போற்றி 108 வரிகள் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலை நவராத்திரி நாட்களில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளில் கேட்பது சிறப்புடையது எனக் கருதப்படுகிறது.
ஓம் செந்தாமரையில் இருப்பவளே போற்றி
ஓம் செல்வத்தின் அதிபதியே போற்றி
ஓம் உன் தாழ் பணிந்தோம் போற்றி
ஓம் உலகளந்தோனின் துணையே போற்றி
ஓம் பொன் மாரி போலிபவளே போற்றி
ஓம் புன்னகை புரிபவளே
போற்றி
ஓம் இல்லாமை அகற்றுவாய் போற்றி
ஓம் ஏழ்மையினைப் விரட்டுவாய் போற்றி
ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றிப் போற்றி
ஓம் சொர்ண லஷ்மியே போற்றி
ஓம் இராஜ லஷ்மியே போற்றி
ஓம் கிரக லஷ்மியே போற்றி
ஓம் கீர்த்தி லஷ்மியே கவனபோற்றி
ஓம் தீப லஷ்மியே போற்றி
ஓம் தான்ய லஷ்மியே போற்றி
ஓம் தன லஷ்மியே போற்றி
ஓம் தைரிய லஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி
ஓம் விஜய லஷ்மியே போற்றி
ஓம் வீர லஷ்மியே போற்றி
ஓம் வித்தியா லஷ்மியே போற்றி
ஓம் வைபவ லஷ்மியே போற்றி
ஓம் கஜ லஷ்மியே போற்றி
ஓம் கனக லஷ்மியே போற்றி
ஓம் சாந்த லஷ்மியே போற்றி
ஓம் சந்தான லஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி
ஓம் ஜெய லஷ்மியே போற்றி
ஓம் ஜோதி லஷ்மியே போற்றி
ஓம் சௌந்தர்யா லஷ்மியே போற்றி
ஓம் யோக லஷ்மியே போற்றி
ஓம் திவ்ய லஷ்மியே போற்றி
ஓம் திருமாலின் துணையே போற்றி
ஓம் மஞ்சள் குங்குமத்தில் உறைபவளே போற்றி
ஓம் மலர் முகம் கொண்டவளே போற்றி
ஓம் ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி
ஓம் குபேர லஷ்மியே போற்றி
ஓம் குறை தீர்க்கும் லஷ்மியே போற்றி
ஓம் தயாள குணவதியே போற்றி
ஓம் தஞ்சம் அடைந்தோம் உன்னையே போற்றி
ஓம் சிங்காசனத்தில் அமர்ந்தவளே போற்றி
ஓம் செல்வந்தராய் உயர்த்திடுவாய் போற்றி
ஓம் தங்க குடம் உடையவளே போற்றி
ஓம் தாமரை பூ ஏந்தியவளே போற்றி
ஓம் ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி
ஓம் மோகினி வடிவுடையாளே போற்றி
ஓம் வைஷ்ணவியாய் வருபவளே போற்றி
ஓம் கதம்ப மலராய் பூஜிப்போம் போற்றி
ஓம் மனோரஞ்சிதம் சாற்றினோம் போற்றி
ஓம் சக்கரை பொங்கலிட்டோம் போற்றி
ஓம் தயிர் அன்னம் தந்திடுவோம் போற்றி
ஓம் பால் அன்னம் படைத்தோமே போற்றி
ஓம் படியளக்கும் நாயகியே போற்றி
ஓம் ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி
ஓம் அன்ன லஷ்மியே போற்றி
ஓம் அதிஷ்ட லஷ்மியே போற்றி
ஓம் எண்ணத்தில் இருப்பவளே போற்றி
ஓம் எளியவரை உயர்த்திடுவாய் போற்றி
ஓம் பந்துவராளி பாடினோம் போற்றி
ஓம் பஞ்சமில்லா வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் வர லஷ்மியே போற்றி
ஓம் வசந்த லஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி
ஓம் சண்டிகா தேவியே போற்றி
ஓம் இந்திராணியாய் வருபவளே போற்றி
ஓம் பாரிஜாத மலரால் பணிவோம் போற்றி
ஓம் சம்பங்கி மலரைச் சாற்றுவோம் போற்றி
ஓம் தீங்கா எண்ணம் படைத்தோம் போற்றி
ஓம் மாதுளம் பழம் ஏற்பவளே போற்றி
ஓம் நீலாம்பரி இசைத்தோம் போற்றி
ஓம் நிழலாக துணை வருவாய் போற்றி
ஓம் ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி
ஓம் சர்பராஜனை ஆசனமாய்க் கொண்டவளே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பவளே போற்றி
ஓம் பத்மாவதி தாயாரே போற்றி
ஓம் பற்றினோம் உன் பாதம் போற்றி
ஓம் வேங்கடவன் திரு மார்பில் விற்றிருப்பவளே போற்றி
ஓம் விருப்பங்கள் நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் ஓங்கு புகழ் தருபவளே போற்றி
ஓம் ஊழ்வினையைக் களைபவளே போற்றி
ஓம் ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி
ஓம் துளசியிலே உறைபவளே போற்றி
ஓம் தொழுதோரைக் காப்பவளே போற்றி
ஓம் வளமோடு வாழ வைப்பாய்ப் போற்றி
ஓம் வையகம் செழிக்க வைப்பாய்ப் போற்றி
ஓம் நெல்லிக்கனியிலே இருப்பவளே போற்றி
ஓம் நெஞ்சார துதிக்கின்றோம் போற்றி
ஓம் வெள்ளி கிழமை நாயகியே போற்றி
ஓம் விளக்கு ஏற்றினால் வருபவளே போற்றி
ஓம் ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி
ஓம் ஸ்ரீ தேவி வடிவமே போற்றி
ஓம் புதேவியாய் இருப்பவளே போற்றி
ஓம் அமர்துத்பவ போற்றி
ஓம் கமலரோப்தா போற்றி
ஓம் சந்திரசோதரி போற்றி
ஓம் விஷ்ணு பத்தினி போற்றி
ஓம் சாரங்கி தேவியே போற்றி
ஓம் சரணடைந்தோம் போற்றி
ஓம் ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி
ஓம் தேவ தேவிகா போற்றி
ஓம் மகாதேவியே போற்றி
ஓம் லோக தேவியே போற்றி
ஓம் எங்கள் இல்லம் வருவாய் போற்றி
ஓம் என்றும் நிலைத்து இருப்பாய் போற்றி
ஓம் எண்ணிய வரம் தருவாய் போற்றி
ஓம் புண்ணியம் யாவிலும்
இருப்பவளே போற்றி
ஓம் பூஜித்தோம் உன்னையே போற்றி
ஓம் ஸ்ரீ மகாலஷ்மியே போற்றிப் போற்றி