Lingashtakam
பிள்ளைகள் தன்னைப் பெற்றெடுத்த தாய்யை மறந்தாலும், தாய் தான் ஈன்ற பிள்ளைய மறந்தாலும், இந்த உடலுக்குள் (தேகத்துக்குள்) சென்ற உயிர் உடலை மறந்தாலும், இந்த உயிரைப் பெற்று இயங்குகின்ற உடல் உயிரை மறந்தாலும், கற்றக்கலையை மனம் (நெஞ்சம்) மறந்தாலும், நினைவற்றுப் போனாலும், கண்கள் மேல் இருக்கும் இமைகள் கண்களைப் பாதுகாக்கும் அவை இமைப்பதை மறந்தாலும், நல்ல தவம் புரிபவர்கள் (மனம் உடையவர்) உள்ளத்தில் இருந்து இயங்கும் (தன்னை வெளிப்படுத்தும்) சிவன் என்னும் நாமமுடையவனே (நம சிவாயத்தை) உன்னை என்றும் நான் மறவேனே.
தீவினைகளை நீக்கும்
ஓம் நமசிவாயம் என்னும் இந்த மந்திரத்தை என்றும் கூறி என் செயலில் காணப்படும் தீவினைகளை நீக்கும் தந்திரம் இதுவே. இதை நான் நன்கு உணர்ந்தேனே என் நாயகனே இந்த ஜகத்தின் ஈசனே (சிவனே) என் மன சுமைகளை (குறைகளை) நீக்கிட வா (வருவாயாக).
என் கண் கண்ட முதல் கடவுளே கயிலை நாதனே. கயவனான என்னைக் காப்பாற்றுவாயாகக் கற்பக நாயகனே கபாலியே என் மன சுமைகளை நீக்கிட வா. கூவி கூற்று ஆடியே வா உழ்வினை நீக்கிவிடுவாய். உமையவளொரு (பாதி பெண் உருவத்தில் தோன்றுபவனே) பாகம் கொண்டவனே பிறைமதியை (பாதி நிலவை) அணிந்தவனே. என் மன சுமையை நீக்கிட வா.
கொன்றை மாலை அணிந்தவனே கொள்கையற்று திரிகின்ற (அலைகின்ற) எனக்கு கடை கண் காட்டுவாய் கருணாமூர்த்தியே (கருணை உள்ளம் படைத்தோனே) சதாசிவனே என் மன சுமையை நீக்கிடுவாய்.
நான் உன்னைப் பற்றிப் பாமாலை பாடவும் நான் உனக்குப் பூமாலை சூட்டவும் அறியாப் பாவியை அருஞ்செயலால் என்னைக் காத்த ஈசனே.
என் மன சுமை நீக்க வா.
கண்ணின் மணியே ஒளியே (உடலுக்கு வெளிச்சம் தருவது கண்) அது போல மண்ணிலும் விண்ணிலும் நீக்கம் மற நிறைந்திருக்கும் நிமலா பிட்டுக்கு மண் சுமந்து வா.
என் மன சுமை நீக்க வா.
ஓம்நம சிவாய, ஓம் நமசிவாய என்னும் உன் நாமத்தைத் தொடர்ந்து கூறுவேன்.