Deivathin Deivam
தெய்வத்தின் தெய்வம் (தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வம்) எங்கள் வேற்காட்டு மாரி
தெவிட்டாத (சலிப்படையாத மொழி தமிழ்) தீந்தமிழில் பாடிடுவோம் மாரி
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி
உன் பக்தர்களுக்கு வேண்டியதை எந்த வேளையிலும் கொடுத்திடுவாய் எங்கள் வேத வல்லி மாரி
நாங்கள் வணங்கும் கோமதியே சங்கரியே குணவதியே எங்கள் மகமாயி
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி
வேற்காட்டு மாரி
வேற்காட்டு மாரியம்மா
கருமை (கருப்பு) நிறம் கொண்டவளே எங்கள்
காத்தாயி (காப்பவள்) கருமாரி
கண்கள் ஆயிரம் கொண்டவளே எங்கள்
கண் கண்ட தெய்வம் கருமாரி (எல்லாம் படைப்புக்கும் காரணமாக இருந்தவள்).
ஓய்வு இல்லாமல் எப்பொழுதும் நின் நாமம்
உரைக்கின்ற உன் மக்கள்
என்றும் மாறாத உன் புகழை அனுதினமும் நான் பாடிடுவேன் அருள் மாரி.
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி
வேற்காட்டு மாரியம்மா
வேற்காட்டு மாரி
நீ கல்லாக இருந்தாலும்
கருணை உள்ளம் கொண்டவள் உன்னைக்
காண வரும் பக்தருக்கு எப்பொழுதும்
காட்சி தரும் தேவி நீ
காலன் (காலங்களைக் கண்காணிப்பவன்) கூட உன்னைக்கண்டு
காத (காணாது அல்லது கண்டு கொள்ளாமல்) தன் வழி சென்றிடுவான்
காத்தாயி கருமாரி
மகமாயி மாகாளி
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி